ஆம்னி பேருந்துகளும் அநியாய கொள்ளையும்

தறிக்கெட்டு ஓடும் ஆம்னி பேருந்துகளின் வேகத்தைப்போல, தொடர் விடுமுறை வந்துவிட்டாலே பேருந்துக் கட்டணமும் மின்னல் வேகத்தில் எகிறிவிடுகிறது. முன்பெல்லாம் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் பல தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப கட்டணம் நிர்ணயித்து, அநியாயக் கட்டண வசூலில் ஈடுபட்டன. இப்போது அந்தத் தலைவலியே இல்லை. ‘கட்டணக் கொள்ளையைச் சரிசெய்கிறோம்’ என்கிற பெயரில், அரசாங்கமே கட்டணத்தைத் தாறுமாறாக உயர்த்தி, ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு முழுச் சலுகையும் அளித்திருக்கிறது. ‘ஐயா அங்குச்சாமி நீ மகராசனா இருக்கணும்யா...’ என அரசுக்குக் கும்பிடு போட்டுவிட்டு, பகல் கொள்ளையைப் பட்டவர்த்தனமாக அரங்கேற்றுகின்றன பெரும்பாலான ஆம்னி பேருந்துகள்!

By Super Admin | November 13, 2023 | 0 Comments

இப்போது வீசுவது AI அலை இனி எல்லாமே ரோபோ..

ரோபாட் என்றதும் உங்கள் மனதில் வரும் சித்திரம் என்ன? இரண்டு கண்கள், கைகள், கால்கள் என மனித உடலைக்கொண்ட இயந்திர உருவம். கண்கள் ரத்தச்சிவப்பாக இருந்தால் அது தீங்கு செய்வது, வழுவழு என்ற குழந்தை முகத்துடன் இருந்தால் அது நன்மை செய்வது. ‘எந்திரன்', ‘2.0' போன்ற படங்கள் இந்தப் பொதுப்புத்தியை வலுப்படுத்தின. தொழில்நுட்ப உலகில் ரோபாட் என்பதன் வரையறை வேறு - ‘நிரல்மொழியால் நடத்தப்படும் தானியங்கித் தொழில்நுட்பம்' எனச் சுருக்கமாக வரையறுக்கலாம். மனிதர்களைப்போலத் தோற்றமளிக்கும் ரோபாட்டுகள், ரோபாட்டிக்ஸ் துறையின் சிறிய உட்பிரிவு மட்டுமே.

By Super Admin | November 13, 2023 | 0 Comments

அவசியமா ஆயுள் காப்பீடு?

அண்மையில் இந்தியாவில் நடத்தப்பட்ட சர்வே ஒன்றில் வெறும் 6% பேர்தான் போதிய அளவுக்கு கவரேஜ் கொண்ட ஆயுள் காப்பீட்டு பாலிசிகளை எடுத்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்தியாவின் முன்னணி ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான எஸ்.பி.ஐ லைஃப் இன்ஷூரன்ஸ், நிதி ஆலோசனை நிறுவனமான டெலாய்ட் இந்தியாவுடன் (Deloitte India) இணைந்து இந்தியர்களின் ஆயுள் காப்பீடு (Life Insurance) பாலிசி குறித்த ஆய்வை நாடு முழுக்க நடத்தியது. இந்தியாவில் உள்ள மெட்ரோ நகரங்கள், சிறு நகரங்கள் என மொத்தம் 41 நகரங்களைச் சேர்ந்த 5,000 பேரிடம் இந்த சர்வே நடத்தப்பட்டது. இதில், அதிர்ச்சி தரும் பல விவரங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. அதில் முக்கியமான விவரங்கள் வருமாறு...

By Super Admin | November 13, 2023 | 0 Comments

Trending Post

Hot Categories

26
8
2
4
3
12
8
3