ஆம்னி பேருந்துகளும் அநியாய கொள்ளையும்

தறிக்கெட்டு ஓடும் ஆம்னி பேருந்துகளின் வேகத்தைப்போல, தொடர் விடுமுறை வந்துவிட்டாலே பேருந்துக் கட்டணமும் மின்னல் வேகத்தில் எகிறிவிடுகிறது. முன்பெல்லாம் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் பல தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப கட்டணம் நிர்ணயித்து, அநியாயக் கட்டண வசூலில் ஈடுபட்டன. இப்போது அந்தத் தலைவலியே இல்லை. ‘கட்டணக் கொள்ளையைச் சரிசெய்கிறோம்’ என்கிற பெயரில், அரசாங்கமே கட்டணத்தைத் தாறுமாறாக உயர்த்தி, ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு முழுச் சலுகையும் அளித்திருக்கிறது. ‘ஐயா அங்குச்சாமி நீ மகராசனா இருக்கணும்யா...’ என அரசுக்குக் கும்பிடு போட்டுவிட்டு, பகல் கொள்ளையைப் பட்டவர்த்தனமாக அரங்கேற்றுகின்றன பெரும்பாலான ஆம்னி பேருந்துகள்!

By Super Admin | November 13, 2023 | 0 Comments

ஒளி ஏற்றுவோம் வழி காட்டுவோம் !

ஒளி ஏற்றுவோம் வழி காட்டுவோம் !

By Super Admin | November 13, 2023 | 0 Comments

இப்போது வீசுவது AI அலை இனி எல்லாமே ரோபோ..

ரோபாட் என்றதும் உங்கள் மனதில் வரும் சித்திரம் என்ன? இரண்டு கண்கள், கைகள், கால்கள் என மனித உடலைக்கொண்ட இயந்திர உருவம். கண்கள் ரத்தச்சிவப்பாக இருந்தால் அது தீங்கு செய்வது, வழுவழு என்ற குழந்தை முகத்துடன் இருந்தால் அது நன்மை செய்வது. ‘எந்திரன்', ‘2.0' போன்ற படங்கள் இந்தப் பொதுப்புத்தியை வலுப்படுத்தின. தொழில்நுட்ப உலகில் ரோபாட் என்பதன் வரையறை வேறு - ‘நிரல்மொழியால் நடத்தப்படும் தானியங்கித் தொழில்நுட்பம்' எனச் சுருக்கமாக வரையறுக்கலாம். மனிதர்களைப்போலத் தோற்றமளிக்கும் ரோபாட்டுகள், ரோபாட்டிக்ஸ் துறையின் சிறிய உட்பிரிவு மட்டுமே.

By Super Admin | November 13, 2023 | 0 Comments

பாதாளத்தில் வீழ்ந்த பத்திரிகை சுதந்திரம்!

“வதந்திகளை பரப்பியதற்காக உன்னைக் கைது செய்யவில்லை. உண்மையைப் பரப்பியதற்காக கைது செய்கிறேன்...’’ - இப்படி ஒரு குற்றச்சாட்டை சுமத்தி பத்திரிகையாளர் ஒருவரை போலீஸ் கைது செய்வதாகச் சித்திரிக்கும் ஆர்.கே.லக்‌ஷ்மன் கார்ட்டூன் சமீபகாலமாக சமூக வலைதளங்களில் அடிக்கடி பகிரப்பட்டு வருகிறது. இப்போது இது பகிரப்படக் காரணம் `நியூஸ் கிளிக்' என்ற செய்தித்தளத்தின் ஆசிரியர் உட்பட அந்த நிறுவனத்தைச் சேர்ந்த இருவரை, மத்திய உள்துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் டெல்லி போலீசார் கைது செய்திருப்பதுதான். பயங்கரவாதிகளையும் தேசவிரோதிகளையும் ஒடுக்குவதற்காகக் கொண்டுவரப்பட்ட UAPA எனப்படும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் இவர்களைக் கைதுசெய்து கொடுஞ்சிறையில் அடைத்திருப்பது அதிர்ச்சி தருகிறது.

By Super Admin | November 13, 2023 | 0 Comments

‘கூழாங்கல்’ திரை விமர்சனம்

உயிரை குடிக்கும் தீவிர தாகத்தை.. இரைப்பையை தின்று தீர்க்கும் அகோர பசியை.. அனுபவித்திருக்கிறீர்களா? பாதத்தை பொசுக்கும் தீ பாதையில் கால் கடுக்க நடந்திருக்கிறீர்களா ? உடம்பே சூரியனாக தகிக்கும் உக்கிர அனுபவம் உண்டா?.. இந்த கேள்விகளுக்கு ‘இல்லை’ என்பவர்கள் ‘கூழாங்கல்லை’ பார்க்கும்போது நிஜத்துக்கு நெருக்கமாக நின்று அதனை பார்க்கலாம். ‘ம்..’ என்பவர்கள் இன்னொருமுறை அதனை அனுபவிக்கலாம்.

By Super Admin | November 13, 2023 | 0 Comments

இந்த ஆட்டம் போதுமா.. இன்னும் கொஞ்சம் வேணுமா?...

1999-ல் உலகக்கோப்பையின் விளம்பரப்பாடல் வெளியாகும் முன்பே நாங்கள் உலகக்கோப்பையை விட்டு வெளியேறி விட்டோம்’’ என்கிறார் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாஸிர் ஹூசைன். இந்த உலகக்கோப்பையிலும் இங்கிலாந்து அவ்வளவு வேகமாகத்தான் வெளியேறியிருக்கிறது. ஒரே ஒரு வித்தியாசம், விளம்பரப்பாடல் மட்டும் முன்கூட்டியே வெளியாகிவிட்டது. இங்கிலாந்துடன் போட்டி போட்டுக்கொண்டு பாகிஸ்தான் ஒரு பக்கம் சரிவை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறது. மந்தமாகத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி தங்களின் பழைய பாய்ச்சலுக்கு மீண்டும் திரும்பியிருக்கிறது. அதிர்ஷ்டவசமாக ஏதோ ஒரு போட்டியை வென்றுவிட்டார்கள் என நம்பப்பட்ட ஆப்கானிஸ்தானும் நெதர்லாந்தும் அந்த துச்சமான கணிப்பைப் பொய்யாக்கியுள்ளன. அத்தனை பேர் மனதிலும் இப்போது ஓடிக்கொண்டிருக்கும் ஒரே கேள்வி, அரையிறுதிக்குச் செல்லப்போகும் அந்த நான்கு அணிகள் எவை? குறிப்பாக அந்த நான்காவது இடத்தைப் பிடிக்கப்போகிற அணி எது என்பதே.

By Super Admin | November 13, 2023 | 0 Comments

Trending Post

Hot Categories

26
8
2
4
3
12
8
3