-தஞ்சை அமலன்
-தஞ்சை அமலன்
கண்ணீர்…
இதுமட்டுமே
எல்லோருக்கும் பொதுவானது!
காரணமற்ற கண்ணீர்தான்..
காரணம் கொண்டுள்ளது!
ஒரு சொட்டு கண்ணீரில்
வேதாரண்யம், தூத்துக்குடி
தோற்றுவிடும்!
ஆனந்த கண்ணீர்
நீலி கண்ணீர் என்பதில்
எனக்கு உடன்பாடில்லை!
சாதியற்றது கண்ணீர்
ஒரு சொட்டு
கண்ணீரை துடைப்பவர்கள்
பாக்கியசாலிகள்!
யாரோ ஒருவர்..
எதற்காகவோ என்ன காரணமோ
சோகத்தின் வாசல் திறந்து
அழும்போது விடும் கண்ணீர்
அப்பழுக்கற்றது!
அந்தக் கண்ணீரை உணர்பவன்
அந்தக் கண்ணீரை
உள்ளங்கையில் ஏந்திக்கொள்பவன்
பரிசுத்தமானவன்!
கண்ணீர்
இதற்காகதான் வருகிறது - என்கிற
வேதியியல் அறிவியலை
தாண்டிய கடவுள்தான் கண்ணீர்!
ஏழையின் கண்ணீர்
கடவுள் என்றால்
ஏழைகள் எல்லாம்
கடவுள்களா என்றாலும்
அப்போதும் மறைமுகமாக
சிரித்துக்கொண்டிருக்கிறான்
கடவுள்!
சரி..
கடவுளுக்கு கண்ணீர் வருமா?
வரும்...
யார் யாருக்கெல்லாம்
கண்ணீர் வருகிறதோ
அவர்கள் கடவுள்!
நீங்கள் கண்ணீரை
பார்க்கும்பொழுதெல்லாம்
கடவுளை காண்பீர்கள்!
அந்தக் கண்ணீரை
நீங்கள் துடைக்கும்போது
கடவுளின்
கண் இமைக்கு கீழே
உங்கள் விரல்கள் இருக்கும்!
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0