'இந்தியன்' படத்தின் வரவேற்பிற்குப் பிறகு, கமலின், 'வீரசேகரன் சேனாபதி' எனும் இந்தியன் தாத்தா கதாபாத்திரத்தை மீண்டும் திரையில் காண ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். தயாரிப்பு சிக்கலுக்குப் பிறகு லைகா சுபாஸ்கரன், ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில் தற்போது 'இந்தியன் 2' மட்டுமல்ல 'இந்தியன் 3'-ம் ரெடியாகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.